Monday, February 23, 2009

RAMAR BALAM

நம் நாட்டின் பழம் பெரும் இதிகாசகாவியம் ராமாயணம், ராமர்பாலம் உள்ளது என்ற இதிகாச உண்மையை நாசா ஆராய்ச்சி மையம் உறுதி செய்து செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டுள்ளது. ராமர் பாலம் 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் நாசா கூறி உள்ளது. நாம் இந்த பாலத்தை ராமர்பாலம் என்று அழைக்கின்றோம். ஆங்கிலேயர்கள் இதை ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அழைக்கின்றார்கள். ஆக இதன் உண்மையை நாசாவே துல்லியமான புகைப்படங்கள் மூலம் உறுதி செய்திருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சி ஆட்சி யாளர்கள் உருவாக்கிய வரை படங்களிலும் இந்தப் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பிறகு இலங்கை வரை உள்ள கடல் பகுதியில் புள்ளிகள் இடப்பட்டு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று எழுதப்பட்டு இருப்பதை தேசப்படத்தில் இன்றும் காணலாம்.

மிகப் பழமையான இந்த பாலம் பல யுகங்களாக இருந்து வருகிறது. உலகத்தின் புராதன சிலைகள், பொக்கிஷங்கள் என்று இப்படிப்பட்ட பழமையான சின்னங்களை உலக புராதன சின்னம் என்று வகைப்படுத்தி உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தான் இத்தகைய பழமை வாய்ந்த ராமர் பாலம் உள்ளது. வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ராமர் பாலத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. சொந்த பொருளாதார ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பழமையான புராதன சின்னத்தை அழிக்கக் கூடிய நெஞ்சழுத்தம், ஆணவம், மமதை, திமிர் ஆகியவை தி.மு.க. வினரைத் தவிர வேறு யாருக்கும் வராது.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றி ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கமிஷன் பெற வேண்டும் என்ற சுயநலப் பேராசையில், போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ராமர் பாலத்தை தி.மு.க. கும்பல் இடிக்க முற்பட்டுள்ளது. அ.தி.மு.க., பாரதீய ஜனதாவும், மற்ற கட்சித் தலைவர்களும் பிற கட்சிகளும் பொது மக்களும் இவ்வகை செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்வளவு எதிர்ப்பையும் மீறி டி.ஆர்.பாலு பணத்தாசையால் நாசா ஆராய்ச்சி மையம் ராமர் பாலம் உள்ளது என்று உறுதிப்படுத்தியதை மறுக்கிறார். இவ்வகை பாலமே இல்லை என்று பொய் சொல்கிறார். இருப்பதையே இல்லை என்று இவ்வளவு பெரிய பொய்யை சொல்ல பாலுவுக்குத் தான் இவ்வளவு துணிச்சல் வரும் தி.மு.க. வினரைத் தவிர வேறு யாருக்கும் இந்ததுணிச்சல் வராது.

இதோடு நில்லாமல் ராமர் பாலம் இல்லை என்று தான் சொன்னதை உண்மையாக்கிட வேண்டும் என்ற முயற்சியில், அரிய வரலாற்று ஆவணங்களை சேகரித்து வைத்துள்ள உலக பிரசித்தி பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திற்கு டி.ஆர்.பாலு 30-4-07 அன்று சென்று ராமர் பாலம் குறித்த வரலாற்று தகவல்களை அடியோடு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தொலைக் காட்சி மற்றும் பத்திரிகை செய்திகள் மூலம் தெரிய
வருகிறது. இங்கு பணிபுரியும் அதிகாரிகளையும் இது குறித்து டி.ஆர். பாலு மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இது மன்னிக்க முடியாத ஒரு கொடும் செயலாகும்.

மத்திய அமைச்சராக இருப்பவர் இது பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டாலே அந்த நூலகத்து அதிகாரிகள் அது குறித்த எல்லா விவரங்களையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் காவல் துறைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக டி.ஆர். பாலு அந்த நூலகத்திற்கு சென்று சுமார் 4 மணி நேரம் இது குறித்து ஆலோசனை செய்து இருப்பதை பார்த்தால் இவர் விவரங்களை சேகரிக்க சென்றதாக தெரியவில்லை. இருக்கின்ற ஆதாரங்களை அழிக்க முற்பட்டதாக தான் தெரிகிறது.

இதற்கு முன் டி.ஆர்.பாலு தன் வாழ்நாளில் இதுவரை எந்த நூலகத்திற்கும் சென்றதாக எந்த தகவலும் இல்லை. திடீரென்று முதன் முதலாக நூலகத்திற்குள் காலடி வைத்திருப்பது நல்ல காரியத்திற்காக இல்லை என்பது தெளிவு. வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த நூலக புறக்கணிப்பு பழக்கத்தை தொடர்ந்து டி.ஆர்.பாலு கடை பிடிப்பது நல்லது. ஒரு சிலர் திடீரென்று சில நல்ல பழக்கத்தை ஆரம்பிப்பது கூட எவ்வளவு ஆபத்தானது என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

இடிக்கப்பட்ட பாலத்தின் கற்கள் அக்வேரியஸ் என்ற கப்பலின் மூலம் ரகசியமாக எடுத்துச் செல்லும் காட்சிகள் தொலைக் காட்சிகள் மூலம் வெளியாகி உள்ளன. குடியரசுத் தலைவரும், பாரதப் பிரதமரும் உடனடியாக இதில் தலையிட்டு ராமர் பாலம் மேலும் இடிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்